அகதி முகாம்
மழையில் வருகிறது
மண் மணம்.....................
அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.................
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு.......................
விற்பனையில் வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது
பூச்செடி................................
தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில்
சாய்ந்தபடி..................................
விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா........................................
வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை...........................
No comments:
Post a Comment